Skip to main content
Breaking News
Breaking

நீங்க பேசுனத திரும்ப வாங்க முடியுமா? பிரபல நடிகை கேள்வி!!!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

dddd

 

பிக்பாஸ் மூலம் செகண்ட் ரவுண்டில் புகழ் பெற்ற நடிகை ஷெரீன். 'துள்ளுவதோ இளமை'யென 'விசில்' அடித்து வலம் வந்தபோது கிடைக்காத வரவேற்பு இவருக்கு தற்போது கிடைத்திருக்கிறது. ஆனால், இவர் பல வருடங்கள் கழித்து டிவியில் தோன்றிய போது இவரது எடையையும் உடல்பருமனையும் பலர் கிண்டல் செய்தனர்.

 

இதனால் மனவருத்தப்பட்ட ஷெரீன் தற்போது கடும் முயற்சியின் மூலம் உடல் எடையைக் குறைத்து 90'ஸ் கிட்ஸ் பார்த்த நாயகியாக திரும்பி வந்திருக்கிறார்.

 

"நான் குண்டா இருந்தப்போ எப்படியெல்லாம் பேசுனீங்க? இப்போ நான் குறைச்சுட்டேன். நீங்க பேசுனத திரும்ப வாங்க முடியுமா? இப்போ என்ன பண்ணுவீங்க" என்று ஆதங்கத்துடனும் ஆனந்தத்துடனும் கேட்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்