இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள இடிந்தகல்புதூர் என்ற கடற்கரை பகுதியில் இலங்கைக்கு மாத்திரைகளை கடத்துவதாக கியூ பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து அங்குசென்று அப்பகுதி முழுவதும் சோதனை நடத்தியதில், அப்பகுதியை சேர்ந்த இருளாண்டி என்பவரது நாட்டுபடகில் இலங்கைக்கு கடத்த முயன்ற 22 பண்டல்களில் டிரமோடல் என்ற வலி நிவாரண மாத்திரைகளை கைப்பற்றினர்.
இதன் மதிப்பு 8 லட்சம் ரூபாய் இது பற்றி கியூ பிரிவு காவல்துறையினரிடம் விசாரித்தபோது, இராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரை கஞ்சா, தங்கம், வயாகரா,போதை மாத்திரைகள் பெரும் அளவில் கடத்தப்படுகின்றனர். ஆனால் உள்ளூர் காவல்துறையினர் தகவல் கொடுத்தாலும் கண்டு கொள்வதில்லை. மிகப்பெரிய அளவில் கடல் பரப்பளவு கொண்டுள்ளதால் போதுமான அளவில் காவல்துறையினரும் இல்லை. இதனால் இவ்வழியாக கடத்தல் அதிகளவில் நடைபெறுகிறது. பெரும் திமிங்கலங்கள் தப்பிவிடுகின்றனர். எப்பொழுதும் பணத்திற்காக இதுபோன்ற அப்பாவிகள் மாட்டிக்கொள்கின்றனர் என்றார் ரகசியமாக.