ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற புதிய உத்தரவுகளை திரும்ப பெற வலியுறுத்தி பொதுத் தேர்வு அறிவித்த நாளில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை அரசு பள்ளிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் முற்றுகையிட்டனர்.
அதே இயக்கத்தைச் சேர்ந்த செல்வா தன் ஸ்டுடியோவில் உண்ணாவிரதம் நேற்று தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, அரசு எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு பெற்றோர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும். தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. பொது தேர்வு என்று எங்கள் குழந்தைகளின் மனதை ரணமாக்கும் அரசு, இப்ப கொஞ்சம் சந்தோசமா இருக்கும் விடுமுறை காலத்தையும் காந்தி திருவிழா என்று பள்ளி அறைகளில் அடைக்கப் பார்க்கிறார்கள்.
எப்படி எங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? மன அழுத்தம் தான் ஏற்படும். இதனால் பல விளைவுகள் ஏற்படும். அதனால தான் யாருக்கும் இடையூறு இல்லாமல் தனி அறையில் உண்ணா நோன்பு போராட்டத்தை தொடங்கினேன். எனக்கு சர்க்கரை நோய் உள்ளதால் உடல் தளர்வு ஏற்படுகிறது என்றார்.
மாலையில் உடல் சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.