
மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்தபுரத்தை சேர்ந்த 5 பேர். இவர்கள் 5 பேர் மீதும் 2003 - 2004ம் ஆண்டுகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் தீவிரமாக தேடிய நிலையில் அவர்கள் தலைமறைவாக கேரளாவிற்கு சென்று பணியாற்றி வந்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் 5 பேர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கேரளா சென்று அவர்களை அழைத்து வந்துள்ளனர். அதில் 2 பேரை அடித்து துண்புறுத்தியதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் மேலும் 3 பேரை போலீசார் எங்கு வைத்து விசாரணை செய்கிறார்கள் என்ற தகவலைக் கூட குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தவில்லை. தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மேலாக நடைபெறும் இந்த சம்பவத்தை கண்டித்து அவர்களது உறவினர் இன்று காலை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை ஆட்சியர் அலுவலத்தில் அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் காரில் ஏறுவதற்காக வந்துகொண்டிருந்த வேலையில் அமைச்சர் கண் முன்பு 5 பெண்களும் மண்ணெண்ணெய் உற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அந்த பெண்கள் செய்தியாளர்களிடம், காவல்துறையினர் கைது செய்த 5 பேரையும் அடித்து சித்தரவதை செய்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். 2 பேரை அடித்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலைக் கூட தர மறுக்கின்றனர் என அந்த பெண்கள் தெரிவித்தனர்.