ஆண்டுதோறும் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுவதற்கு முன் பள்ளி கல்லூரி வாகனங்களின் தரம் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளின் முன்னிலையில் ஆய்வு செய்யப்படும்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட 96 பள்ளிகளின் 350 வாகனங்களில் 260 வாகனங்கள் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, காவல்துறை உதவி சூப்பிரண்ட் ஜவகா், வட்டார போக்குவரத்து அலுவலா் பழனிசாமி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வாகனத்தின் தரைதளப் பகுதி சரியான பாதுகாப்பு இல்லாமலும் அவசர வழி கதவு செயல்படாமலும் முதலுதவி உபகரனங்கள் மற்றும் தீயணைப்பு கருவிகள் இல்லாமலும் மாணவா்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் நிலையில் இருப்பதாக 25 பள்ளிகளின் வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டன.
இந்த தடை விதிக்கப்பட்ட வாகனங்களை ஆய்வோடு விட்டு விடக்கூடாது. அந்த வாகனங்களை சம்மந்தப்பட்ட பள்ளிகள் இயக்குகிறார்களா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அப்படி அந்த வாகனங்கள் இயக்கப்பட்டால் அந்த பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கூறியுள்ளனா்.