Skip to main content

சிறுமிக்கு குழந்தை திருமணம்; வலுக்கட்டாயமாக தோளில் தூக்கிச் சென்று கணவர் வீட்டில் விட்ட அதிர்ச்சி சம்பவம்

Published on 06/03/2025 | Edited on 06/03/2025
14-year-old girl marries in child marriage; Shocking incident where husband carries her on his shoulder and leaves her at home

கிருஷ்ணகிரியில் 14 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த தாய் மற்றும் சகோதரன் மற்றும் திருமணம் செய்து கொண்டவர் என மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருக்கு வலுக்கட்டாயமாக குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் வைத்து கடந்த மூன்றாம் தேதி திருமணம் நடந்த நிலையில், தாய் வீட்டிற்கு சிறுமி வந்துள்ளார். அப்போது தனக்கு நடந்த இந்த திருமணத்தில் விருப்பமில்லை என சிறுமி தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளனர்.

14-year-old girl marries in child marriage; Shocking incident where husband carries her on his shoulder and leaves her at home

இதனால் அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். இதனையறிந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமி கதறி அழுத நிலையிலும் விடாமல் தோளில் தூக்கிச் சென்று கணவனின் வீட்டில் வலுக்கட்டாயமாக விட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் 14 வயது குழந்தைக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாய் மற்றும் அவரது சகோதரன், குழந்தைக்கு தாலி கட்டிய நபர் என மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்