நீலகிரி மாவட்டம், கோத்தகிரிக்கு சென்றார் டிடிவி தினகரன். கோத்தகிரி டானிங்டன் பகுதியிலுள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி, கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
தமிழக அரசை எதிர்த்து பேசுபவர்கள் மற்றும் விமர்சனம் செய்பவர்களை கைது செய்து அரசு நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் மூலம் பெற்றுக் கொண்ட 19 எம்.எல்.ஏக்கள் உல்லாசமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார். அவர் கீழ்பாக்கத்தில் சேர்க்கப்பட வேண்டியவர் என்பதுதான் எனது பதில். நிச்சயம் எங்களுக்கு நீதி கிடைக்கும். அதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் போது நிச்சயம் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்.
ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டிற்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது தான் உண்மை. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கொண்டு வருவதை கடுமையாக எதிர்த்து வந்தார். ஜி.எஸ்.டி.யால் தமிழகத்தில் உள்ள தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. 8 வழிச்சாலை திட்டத்தால் வீடுகள், நிலங்களை இழந்து தவிக்கும் விவசாயிகளை பழனிமலை முருகன் தான் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.