Skip to main content

நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட இருவருக்கு 'கலைஞர் எழுதுகோல்' விருது

Published on 06/03/2025 | Edited on 06/03/2025

 

 

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பாக 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த இதழியலாளருக்கான 'கலைஞர் எழுதுகோல்' விருதுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி தலைமைச் செயலகத்தில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மரபு வழி ஓவியம், நவீன பாணி ஓவியம், சிற்பக்கலை ஆகியவற்றில் திறமை மிக்க ஆறு கலைஞர்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான 'கலைச்செம்மல் விருது' வழங்கப்பட்டது. அதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த இதழியலாளருக்கான 'கலைஞர் எழுதுகோல்' விருது வழங்கப்பட்டது.

அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான 'கலைஞர் எழுதுகோல்' விருதினை நக்கீரன் ஆசிரியர் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகியோருக்கு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார். 

சார்ந்த செய்திகள்