தமிழர்களின் திருவிழாக்கள் அர்த்தமுள்ளதாகவே இருக்கும். கோடை வெயிலின் வெக்கையை சமாளிக்க திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. அதேபோல விதை நேர்த்தி செய்ய முளைப்பாரித் திருவிழாக்கள், காடுகளை பாதுகாக்க வனங்களில் கடவுள்களை வணங்கினார்கள். இப்படி அத்தனை விழாக்களும் அர்த்தமுள்ள விழாக்களாக தமிழர்கள் கொண்டாடி வந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி அருகில் உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாக்கள் பல நாட்கள் நடக்கும். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து செல்வார்கள்.
அதே திருவிழாவில் ஆலவயல்நாடு நாடு செலுத்தும் நிகழ்ச்சி ரொம்பவே வித்தியாசமானதாக உள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்றும் பக்தர்கள் ஒரு நாள் பழந்தமிழனாகவே மாறிவிடுகிறார்கள். சேற்றுக் குளியல் உடல் முழுவதும் சேற்றில் நிறைந்திருக்க தலையில் பறவைகளிக் சிறகுகள், உடலில் பஞ்சுகள் ஒட்டிக் கொண்டு கைகளில் கம்புகளுடன் சிலம்பமாடி வருவதை காணவே ஆயிரக்கணிக்கில் திரண்டு நிற்கிறார்கள் பக்தர்கள். இவர்களுக்கு முன்னால் ஆலவயல்நாட்டார் பதாகையுடன் செல்ல பின்னால் செல்லும் அனைவரும் சிலம்பத்துடன் செல்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட கம்புளும் காணப்படுகிறது.


இது குறித்து இளைஞர்கள் கூறும் போது.. திருவிழாக்கள் நம் முன்னோர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. அப்படித்தான் நாடு செலுத்துதல் விழாவும். சேற்றில் குளித்தால் உடலில் தோல் நோய்கள் பறந்து போகும். அதனால் தான் நம்முன்னோர்கள் கோடையில் வரும் தோல் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சேற்றுக் குளியலுடன் திருவிழாவில் கலந்து கொண்டனர். சுமார் 5 மணி நேரம் வரை அந்த சேரு நம் உடலில் இருப்பதால் நம் உடம்பில் உள்ள தோல் நோய்கள் பறந்து போகிறது. அந்த மருத்துவத்தை திருவிழாவாக செய்வதால் ஏராளமானோர் வந்து கலந்து கொள்கிறார்கள்.


ஆனால் பல மேலை நாடுகளில் இந்த சேற்றுக் குளியலை பணத்திற்காக மருத்துவமனைகளில் செய்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் பணமும் வசூல் செய்கிறார்கள் என்றனர்.