110 கிலோ எடை குறைந்துள்ளதால் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறது நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி.
யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் அருகில் வனபத்திரகாளி அம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டியில் நடந்தது. இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் நெல்லையப்பர் கோவில் யானை ‘காந்திமதி‘யும் கலந்து கொண்டது. சிறப்பு முகாம் முடிந்து, யானை காந்திமதி நெல்லைக்கு திரும்பியது.

அப்போது, ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து எஸ்.என்.ஹைரோடு வழியாக நெல்லையப்பர் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டது. எடை குறைந்து வந்துள்ள யானை காந்திமதி, கோவிலுக்கு உற்சாகமாக நடந்து சென்றது. சிறப்பு முகாம் முடிந்து வந்த யானை காந்திமதிக்கு கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
முகாமுக்கு செல்வதற்கு முன்பு 4,340 கிலோ இருந்த யானை காந்திமதி, தற்போது 110 கிலோ எடை குறைந்து 4,230 கிலோவாக உள்ளது. யானைக்கு சத்து மாத்திரைகளும், சொர்ண கல்ப லேகியமும் டாக்டர்கள் கொடுத்து உள்ளனர் என தெரிவிக்கிறார் கோவில் நிர்வாகி.