Published on 22/05/2020 | Edited on 22/05/2020

தி.மு.க.வில் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்ட வி.பி.துரைசாமி பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனைச் சந்தித்து தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வின் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னதாக இன்று காலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வி.பி.துரைசாமி, "தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் அளிக்கவுள்ளேன். தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட நோக்கத்தில் இருந்து பிறழ்ந்து போய்விட்டது. தி.மு.க.வில் ஜாதிக்கொரு நீதி என்ற வகையில் ஜாதி பார்க்கப்படுகிறது. பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும். பாஜகவின் கொள்கைகளை ஏற்றே அதில் இணைகிறேன்" என்றார்.