Skip to main content

“தொண்டர்கள் தான் சீக்ரெட் ஆப் மை எனர்ஜி” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

Volunteers are the secret of my energy says CM Stalin

 

திருவண்ணாமலையில் இன்று ( 22.10.2023) 8 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 14 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கும் திமுக வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

 

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  பேசுகையில், “தொண்டர்கள் தான் சீக்ரெட் ஆப் மை எனர்ஜி (Secret Of My Energy). இந்த பாசப்பிணைப்பை உடன்பிறப்பே என்ற சொல் மூலமாக உருவாக்கி கொடுத்தவர் கலைஞர். திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் திமுகவும். அதை யாராலும் பிரிக்க முடியாது. திமுக உருவான போது நடந்த முதல் பொது கூட்டத்தில் 1451 ரூபாய் வசூல் ஆனது. அதில் 100 ரூபாயை பாவூர் சண்முகம் வழங்கியது. 1957 தேர்தலில் முதல் முதலாக திமுக போட்டியிட்டு 15 பேர் வெற்றி பெற்றனர். அந்த 15 பேரில் 3 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதில் பாவூர் சண்முகமும் ஒருவர் ஆவார். முதல் நாடாளுமன்ற தேர்தலில் 2 பேர் வெற்றி பெற்றனர். அதில் ஒரு தொகுதி திருவண்ணாமலை ஆகும்.

 

வாக்குச்சாவடி முகவர்கள் பெற்றுள்ள பயிற்சி ஒரு தேர்தலுக்கானது மட்டுமல்ல. இந்த பயிற்சி அனைத்து தேர்தல்களுக்கும் பொருந்தும். வாக்குச்சாவடி முகவர்களை நம்பிதான் நாற்பதும் நமதே என்று முழங்கி வருகிறோம். ஒவ்வொரு வாக்காளர்களின் குடும்பத்தில் ஒருவராக வாக்குச்சாவடி முகவர்கள் மாற வேண்டும்” என பேசினார். முன்னதாக திருவண்ணாமலையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட அருணை பன்னோக்கு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையையும் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்