Skip to main content

விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் இவரா?

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

 

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி சிலர் விருப்ப மனு அளித்திருந்தனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேர்காணல் செய்தனர்.  

 

vikravandi


 

இந்த நிலையில் இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படுகிறது. மேலும் தேர்தல் நடக்கும் தொகுதியில் பொறுப்பாளர்களாக யாரை நியமிப்பது, தேர்தல் பணியில் எப்படி பிரிந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. 


 

 

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தியை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் சிவி சண்முகத்தின் ஆதரவாளரை நிறுத்தினால்தான் முடியும் என்கின்றனர். ஏற்கனவே சிவி சண்முகம் தனது அண்ணனான ராதாகிருஷ்ணனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு அது கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிவி சண்முகம் அண்ணன் ராதாகிருஷ்ணனுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அதிகம் உள்ளது என்கின்றனர் அதிமுகவினர்.


 

 

மேலும் கடந்த முறை விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் 41,428 வாக்குகள் பெற்றிருந்தார். பா.ம.க., தேமுதிக தங்கள் கூட்டணியில் இருப்பதால் எப்படியும் இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்கினறனர் அக்கட்சியினர். 

 

சார்ந்த செய்திகள்