தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றன. அந்தந்த கட்சிகளின் சார்பில் கூட்டணி குறித்தும், பொதுக்குழு பற்றியும், செயற்குழு பற்றியும், தேர்தல் பிரச்சாரம் குறித்தும் அறிவிப்புகள் வெளியிட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இன்று (12.02.2021) தேமுதிக சார்பில் கொடி நாள், விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பிரெமலதா விஜயகாந்த் கூறியதாவது, தொடர்ந்து தொண்டர்கள், தேமுதிக சார்பில் விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுக்கோள் விடுதிருந்த நிலையில், அதை ஏற்று இனி எதிர்வரும் நாட்களில் அனைத்து விவாதங்களிலும் தேமுதிக சார்பில் யாரெனும் பதில் அளிப்பார் எனவும், சசிகலாவை சந்திக்க நாங்கள் நேரம் கேட்டதாக பரவும் ஒரு செய்தி தவறானது, கட்சியைச் சார்ந்த எந்த செய்தி வந்தாலும் அதை எங்கள் தலைமையிடம் உறுதிப்படுத்திய பின்னர் வெளியிடுங்கள் என்றும் கூறினார்.
பின்னர் கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு, எதுவாக இருந்தாலும் முதலில் கூட்டணி தலைமையிடம் கேட்பதே சரி என்றும், இதுவரை எங்களுக்குள் ஏதும் பிரச்சனைகள் இல்லை என்றும் கூறினார். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தேமுதிக சார்பில் செயற்குழு, பொதுக்குழு நடத்தி, பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் கூறினார்.