Published on 20/03/2025 | Edited on 20/03/2025

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள எட்டு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள மொத்தம் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை தொடங்கி வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை இதற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.