திருவாரூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தி.மு.க பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு.
அப்போது அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. தற்போதுள்ள தி.மு.க கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தி.மு.க தலைவர் கூட்டணியில் யார் யார் இருப்பார் என்று முடிவு செய்வார்.
உதயநிதி ஸ்டாலின் கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ளார். அவர் தேர்தலில், தமிழகத்தில் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட்டு வெற்றி பெறுவார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கோட்டைக்குச் செல்வது உறுதியாகிவிட்டது.
வேளாண் திருத்தச் சட்ட மசோதா குறித்து பிரதமர் பேசுவது அரசியல். தமிழக முதல்வர் பேசுவது பிதற்றல். வேளாண் திருத்தச் சட்ட மசோதாவை தமிழக அரசு ஆதரித்தது ஒன்றே போதும் அவர்களது ஆட்சியை அகற்றுவதற்கு. இவ்வாறு கூறினார்.