கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மத உணர்வுகளை புண்படுத்தினால் அவரகள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்களோ அதுபோல இந்துக்களின் மத உணர்வுகள் காயப்படுத்தப்பட்டால் இந்துக்கள் எதிர்வினையாற்றும் வரை திருமாவளவன் போன்ற இந்து விரோதிகள் இந்துக்களை சீண்டிக்கொண்டு தான் இருப்பார்கள். வீதிக்கு வரும் நேரமிது' என கூறியிருந்தார்.
The defeat in the assembly by-elections has created fear in the mind of DMK. That is why it wants to avoid facing the electorate. Hence the case. https://t.co/kEucVALkA4
— H Raja (@HRajaBJP) November 28, 2019
இதனையடுத்து இணையவாசிகள் பலரும் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் திமுகவினரிடையே பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் வாக்காளர்களை எதிர்கொள்வதைத் தவிர்க்க விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார். எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு திமுகவினர் பலர் எதிர்ப்பு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.