Published on 17/09/2018 | Edited on 17/09/2018
![ops speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/9ttyp5u0T2lgdbi_Xff8GAWodVk47snN6kj8izwsAIY/1537188034/sites/default/files/inline-images/ttv%20dhinakaran-ops.jpg)
தினகரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும் என்று துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த பொன்னேரியில் அண்ணா 110வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம்,
தனிப்பட்ட குடும்பத்திற்கு கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக் கூடாது என தர்மயுத்தம் நடத்தி, ஒரு குடும்பத்தின் இரும்பு பிடியில் இருந்து அதிமுகவை காப்பாற்றியுள்ளோம்.
எனவே எந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தல்தான் தினகரனின் கடைசி தேர்தல்.
இந்த இடைத்தேர்தலுடன் தினகரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும் என்றார்.