![EPS speak at vellore ADMK conference](http://image.nakkheeran.in/cdn/farfuture/mnEqGIeyEhoRS-t_W_02S7PLNI818LUqmxdPI29e980/1739713017/sites/default/files/inline-images/eppn.jpg)
வேலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை மண்டல மாநாடு இன்று (16-02-25) நடைபெற்றது. ‘இலக்கு 2026’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாடில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “சென்னை கோட்டைக்கு செல்வதற்காகவே வேலூர் கோட்டையில் திரண்டுள்ளோம். கோட்டையில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்பும் கூட்டம் தான் இந்த வேலூர் மாநாடு. இன்று பலருக்கு தூக்கம் வராது. ஒரு கட்சி வலுவாக இளைஞர்கள் அதிகமாக இருக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி சூடும். இளைஞர்களை அதிகம் கொண்டிருக்கும் கட்சி அதிமுக. அதிமுக யாரை நம்பியும் இல்லை, மக்களை நம்பியே உள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், ‘அப்பா’ என கதறுவது முதல்வருக்கு கேட்கவில்லையா?.
2026 தேர்தலில் அதிமுக தலைமையில் வலிமையான வெற்றிக் கூட்டணி அமையும். திமுகவுக்கு கொள்கையும் கிடையாது, கூட்டணியும் கிடையாது, அடிக்கடி நிறம் மாறும் கட்சி தான் திமுக. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களைப் பார்க்காதீர்கள், மக்களைப் பார்த்து நிதி ஒதுக்குங்கள். தமிழ்நாட்டில் இருமொழிப் கொள்கைதான் கடைபிடிக்கப்படும்” என்று கூறினார்.