வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி, திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கடிதம் கொடுத்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்னர் அதிமுக கூட்டணியில் விலகுவதாக அக்கட்சித் தலைவர் கருணாஸ் அறிவித்திருந்தார். ஏற்கனவே திமுகவில் உள்ள பெரும்பாலான கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கருணாஸின் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.