Skip to main content

அமைச்சர் பெயரை சொல்லி பணம் வசூல்; ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள்!

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

 

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் பெயரை கூறி  கட்டாய வசூல் செய்ய வற்புறுத்துவதை கண்டித்து பகுதி நேர ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

t

 

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகளிடமிருந்து நேரடி நெல்  கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்துவருகிறது.

 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பகுதி நேர ஊழியர்களிடம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் போது அதிகாரிகள் அமைச்சரின் பெயரைகூறி மூட்டை ஒன்றிற்கு 5 ரூபாய் கட்டாய வசூல் செய்ய வற்புறுத்துவதாகவும் அதனை ஏற்காத ஊழியர்களை லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் மிரட்டி பணி இட மாற்றம், தற்காலிக பணிக்கம் போன்ற மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

 

t

 

மேலும் நெல் பிடிக்கும் இடங்களில் தரமான சாக்குகளை வழங்க வேண்டும் , கொள்முதல் செய்யப்பட்டு திறந்த வெளியில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக தானிய சேமிப்பு கிடங்கிற்கு இயக்கம் செய்ய வலியுறுத்தியும் மாவட்டம் முழுவதும் பணி புரியும் நேரடி நெல் கொள்முதல் ஊழியர் அனைத்து சங்கத்தின் சார்பில் மாநில பொதுசெயலாளர் வள்ளுவன் தலைமையில்  100க்கும் மேற்பட்டோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம்  முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

உடனடியாக அரசு  தலையிட்டு இதனை தடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்