Skip to main content

தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைகிறார்? அதிர்ச்சியில் தினகரன்!

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டவர் தங்க தமிழ்ச்செல்வன். இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.களில் ஒருவர் ஆவார். நேற்று தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பேசிய அவர், தினகரனின் அமமுக கட்சியை மக்கள் ஏற்கவில்லை என்று கூறினார். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காகவே கட்சி ஆரம்பித்தோம். ஆனால் மக்கள் நாங்கள் தனி சின்னம் பெற்று போட்டியிட்டதை ஏற்கவில்லை என்றும் கூறினார். 
 

ammk



தேனி தொகுதியை பொறுத்தவரை தேர்தல் மின்னணு இயந்திரத்தில் எந்த பிரச்னையும் இல்லை சரியாக தான் இருந்தது என்று தெரிவித்தார்.எடப்பாடி பழனிச்சாமி அரசை வழக்கமாக எதிர்க்கும் தங்க தமிழ்ச்செல்வன் அந்த பேட்டியில் பாராட்டி எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில் அதிமுக அரசு பிளாஸ்டிக்கை ஒழித்தது ரொம்ப புடிக்கும் என்று கூறினார். தங்க தமிழ்ச்செல்வனின் இந்த பேட்டியின் மூலம் விரைவில் அதிமுகவில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தினகரன் கட்சியில் மேலும் சில நிர்வாகிகள் வெளியேறுவார்கள் என்று தெரிகிறது.   

சார்ந்த செய்திகள்