Published on 08/01/2019 | Edited on 08/01/2019

பொருளாதார ரீதியாக நலிந்தவர்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இந்த விவாதம் நடைபெற்றது.
மக்களவையில் 10% இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெற்று முடிந்த பின்னர் வாக்கெடுப்பு தொடங்கியது. இந்த இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்.பி. தம்பிதுரை மக்களவையில் இருந்து வெளியேறினார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய பொப்பிரிவினருக்கு 10 சதகிவிதம் இடஒதுக்கீடு அளிக்க வழி செய்யும் இந்த மசோதா இடஒதுக்கீடு கொள்கையில் குழப்பம் ஏற்படுத்தும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு என்று கூறி தம்பிதுரை வெளிநடப்பு செய்தார்.