Skip to main content

ரஜினி அரசியல் குறித்து எஸ்.வி.சேகர் பரபரப்பு பேட்டி!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

ரஜினி அரசியலுக்கு எப்ப வருவார் என்ற கேள்வி எழுந்த நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்தார். மேலும் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக தேர்தலில் நிற்பேன் என்றும் கூறினார்.ரஜினி அரசியல் குறித்து பல்வேறு விமர்சனங்களும், வரவேற்புகளும் எழுந்தன. இந்த நிலையில் பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் எஸ்வி சேகர் பேசும் போது, புதிய கல்வி கொள்கை குறித்து பேசிய சூர்யாவின் கருத்தை எதிர்க்கிறேன். தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை கொண்டுவர சூர்யா வலியுறுத்தி இருக்கவேண்டும்.
 

rajini



காலத்துக்கு ஏற்ற கல்வியை படித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமையும் என்று கூறினார். மேலும் திராவிட கட்சிகளின் ஆட்சிகளால் தான் தமிழ்நாட்டின் கல்வி தரமே சீரழிந்துவிட்டது. அதே போல், ரஜினி அரசியல் குறித்து பேசும் போது, ரஜினி கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை எல்லாம் முடித்து விட்டார். விரைவில் அரசியலுக்கு வருவார். இதனை கே.எஸ்.அழகிரி விரும்பவில்லை என்றாலும் மு.க. அழகிரி விரும்புவார்" என்று கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்.வி. சேகர் பேசியது மட்டுமில்லாமல், மு.க.அழகிரி பெயரையும் குறிப்பிட்டு பேசியது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனங்களும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

சார்ந்த செய்திகள்