Skip to main content

பழனிசாமிக்கு தேவை கமிஷன் தான் ! கமிஷன் கிடைத்தால் என்னவேணாலும் செய்வார் முதல்வர் ! 

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

திருச்சி மத்திய மண்டலத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறவைத்த டெல்டா மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் திருச்சியில் கே.என்.நேரு ஏற்பாட்டில், உழவர் சந்தையில் நடைபெற்றது.
 

stalin


இந்த நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், தஞ்சை எம்.பி. பழனிமாணிக்கம், கரூர் எம்.பி. ஜோதிமணி, நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், பெரம்பலூர் எம்.பி. ஐஜேகே பாரிவேந்தர், இவர்களோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திருவாரூர் பூண்டிகலைவாணன், அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி, தஞ்சை நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து மகிழ்ந்தார். இந்த கூட்டத்தில் காதர்மொய்தீன், ஐ.பெரியசாமி, உதயநிதிஸ்டாலின், சபரீசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சட்டமன்றத்திலும், தேர்தலிலும் பிரச்சாரத்திலும் தவறாமல் பங்கேற்றவர் அன்பில் தர்மலிங்கம் என்றார். அண்ணாவுக்கும், பெரியாருக்கும் ஏற்பட்ட பிரிவில் கசப்பை மறந்து நட்பு பாராட்டியவர் எனவும் குறிப்பிட்டார். காங்கிரஸ் அறிவித்த வேட்பாளரை எதிர்த்து பிரச்சாரம் செய்யவந்த பெரியாரிடம் ஆசி பெற சென்றவர் எனவும் குறிப்பிட்டார். மேலும், கலைஞர் சமாதியை அண்ணா சமாதிக்கு அருகில் அமைக்க எதிர்ப்பு எழுந்த போது போராடி வென்றதாக குறிப்பிட்டார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் உரை:

கலைஞர் இல்லாமல் கொண்டாடும் கலைஞரின் முதல் பிறந்தநாள். தேனியில் அதிமுக கோடி, கோடியாக பணம் கொட்டி வெற்றி பெற்றிருக்கிறார்கள் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இப்போது நாடாளுமன்றத்தில் வெற்றியை போன்று வெற்றிபெற வேண்டும் சூளுரை ஏற்க வேண்டும். ஐந்து முறை ஆட்சி அமைத்த கலைஞரின் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த, கலைஞரின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றார். 
நானே விவசாயி என்கிறார் முதல்வர். ஆனால் அவரே விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார். அவருக்கு தேவை எல்லாம் கமிஷன்தான். 
 

stalin


தமிழக அதிமுக அரசு இந்த வெற்றியை கொச்சைப்படுத்துகிறது. அப்போது மோடி வெற்றி பெற்றது பொய் பிரச்சாரமா? 37 எம்பிக்களை வைத்து என்ன செய்வோம் என்பது நாடாளுமன்றம் கூடும்போது தெரியும்.. அதிமுக ஜடம் எம்பிக்கள்போல் திமுக எம்பிக்கள் இருக்க மாட்டார்கள். 

பெரியார் வழியில் போராடுவார்கள். மும்மொழி கொள்கையை திரும்ப பெற வைத்தோமா இல்லையா? காவிரி தண்ணீர் கேட்டால் மேகேதாது பற்றி பேசுகிறீர்களே. அது காவிரி ஆணையமா, கர்நாடகா ஆணையமா? காவிரி தண்ணீர் 8 வருடமாக மேட்டூர் அணை திறப்பு இல்லை. எடப்பாடிக்கு இது பற்றி கவலை உண்டா? கர்நாடக முதல்வரோடு பேசினாரா? அதிகாரிகளை அங்கே அனுப்பினாரா? எட்டு வழிச்சாலையில் காட்டும் அவசரத்தை ஏன் இதில் காட்டவில்லை? எட்டு வழி சாலை வந்தால்தான் மூவாயிரம் கோடி வரும். பணத்தை தவிர எந்தவித கொள்கையுமற்ற சர்வாதிகார எடுபிடி ஆட்சி நடக்கிறது.. எட்டுவழி சாலையை மக்களை சமாதானப்படுத்தி கொண்டு வந்தே தீருவேன் என்பதே விவசாயியான எடப்பாடியின் நோக்கம்.

மேலும் பேரிழப்புக்கு எதிரான பேரியக்கத்தின் சார்பில் நடத்துகிற மனிதச்சங்கிலிக்கு திமுக ஆதரவு என தெரிவித்தார். கடந்த ஆண்டு இரண்டு பேரை பலி கொடுத்திருக்கிறோம். இந்த முறை மூன்று பேரை பலி கொடுத்திருக்கிறோம். இந்த தற்கொலைக்கு காரணமே மத்திய, மாநில அரசுகள்தான், சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு மரண அடியை அதிமுக அரசுக்கு புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்