1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சியின் போது மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது அவரது தவறான செய்கைகளுக்காகதான் என அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதற்கு திமுக சார்பாக கண்டனங்கள் தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு மாஃபா பாண்டியராஜன் வீட்டின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் அவரது உருவ பொம்மையும் எரித்தனர். இதனையடுத்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதை தொடர்ந்து திமுகவினர் போராட்டதை கைவிட்டனர். அதன் பின்னர் திமுகவினர் இஸ்மாயில் கமிஷன் அறிக்கையை வெளியிட்டு அதில் ஸ்டாலின் பெயர் இருப்பதைக் காட்டி ஆதாரத்தைக் காட்டினர். இதையடுத்து அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஸ்டாலினிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறிவந்தனர்.
இந்த நிலையில் இந்நிலையில் துக்ளக் பத்திரிகையில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் குருமூர்த்தி, "ஸ்டாலின் மிசா கைதியாக சிறையில் இருந்தது உண்மை. அது எனக்கே தெரியும். அவசர காலம் முடிந்து நடந்த 1977 தேர்தலில், அவருடன் இணைந்து முரசொலி மாறனுக்கு நான் பிரச்சாரம் கூட செய்திருக்கிறேன் என்று தெரித்துள்ளார். பாஜக ஆதரவாளரான துக்ளக் குருமூர்த்தி ஸ்டாலின் மிசா கைதி தான் என்று தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.