Skip to main content

எந்த தியாகமும் செய்ய தயார்.... சோனியா காந்தி கடிதம்

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

 

நாட்டின் நலனுக்காக எந்த தியாகமும் செய்ய தயார். இதை நான் உங்களுக்கு வாக்குறுதியாக அளிக்கிறேன் என ரேபரேலி தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் சோனியாகாந்தி கூறியுள்ளார்.
 

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிட்ட சோனியாகாந்தி வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, ரேபரேலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். 


 

 

sonia gandhi



அந்த கடிதத்தில், எல்லா நாடாளுமன்ற தேர்தல்களையும் போலவே இந்த தேர்தலிலும் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றி பெறச் செய்து இருக்கிறீர்கள். இதற்காக ரேபரேலி தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், சுவாபிமான் தளம் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 

இந்த தொகுதியில் எனக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாத சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
 

உங்கள் எல்லோரின் முன்பும் எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக உள்ளது. நீங்கள்தான் எனது குடும்பம்; நீங்கள்தான் எனது சொத்து. உங்களிடம் இருந்துதான் எனக்கு சக்தி கிடைக்கிறது.


 

 

வரும் நாட்கள் மிகவும் சோதனையான காலகட்டம் என்பதை நான் அறிவேன். ஆனால் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அன்பு ஆகியவற்றின் மூலம் எதிர்நோக்கியுள்ள சவால்களை வெல்ல முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.
 

நாட்டின் நலன்களையும் மற்றும் காங்கிரசில் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய பண்புகளையும் பாதுகாக்க எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன். இதை நான் உங்களுக்கு வாக்குறுதியாக அளிக்கிறேன். இவ்வாறு கூறி உள்ளார்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.