Skip to main content

‘மோடி அன் கோ’ பொது விவாதத்துக்கு தயாரா? - சித்தராமையா கேள்வி

Published on 07/05/2018 | Edited on 07/05/2018

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற ஐந்து நாட்களே உள்ள நிலையில், மோடி மற்றும் எடியூரப்பா விவாதத்தில் கலந்துகொள்ளத் தயாரா என கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குசேகரிப்பில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் மோடி, யோகி உள்ளிட்டோரும், காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி, ஆளும் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தை சீரழித்துவிட்டதாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எந்த நலத்திட்ட உதவிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்து வருகிறார்.

 

 

இந்நிலையில், இன்று காலை செய்தித்தாள்களில் காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், ‘மோடி மற்றும் எடியூரப்பா ஆகியோர் போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள். ஏன் நமக்குள் ஒரு பொது விவாதத்தை வைத்து விஷயங்களை விவாதிக்கக் கூடாது? அதன்மூலம் மக்கள் உண்மையை அறிந்துகொள்ளட்டும். ஆறரை கோடி கன்னட மக்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மத்தியிலேயே இந்த விவாதத்தை வைத்துக்கொள்ளலாம். விவாதத்திற்கான நேரம், இடம் எல்லாமே உங்கள் விருப்பம்தான்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் முதல்வர் சித்தராமையாவின் கையொப்பமும் இடம்பெற்றிருந்தது.

 

அதேபோல், சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் எடியூரப்பாவை விவாதத்திற்கு அழைத்திருந்தேன். மோடியும் அதில் கலந்துகொள்ளலாம். கையில் குறிப்புகளையும் அவர்கள் கொண்டுவரலாம்’ என பதிவிட்டிருந்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்