தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
சேர்மன், துணை சேர்மன், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, திருப்பூரின் துணை மேயர் பதவியும், கூத்தாநல்லூரில் நகராட்சி தலைவர் பதவியும், பவானி, புளியங்குடி உள்ளிட்ட நான்கு இடங்களில் நகராட்சி துணைத்தலைவர் பதவியும், வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர் ஆகிய நான்கு இடங்களில் பேரூராட்சி தலைவர் பதவியும், கூத்தைப்பார், ஊத்துக்குளி உள்ளிட்ட ஆறு இடங்களில் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.