Skip to main content

இஸ்ரேல் செல்வதற்கு முன்பு டெல்டா பக்கம் நடைபயணம் போங்க... முதல்வருக்கு விவசாயிகள் அட்வைஸ்

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

 

முதலமைச்சர் நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேல் செல்வதற்கு முன்பு டெல்டா மாவட்டங்களுக்கு நடைபயணம் செல்லுங்கள் என்று காவிரி நீர் பாசன விவசாயிகள் நல சங்கம் மகாதானபுரம் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

 

71111


 

இதுகுறித்து காவிரி நீர் பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் விடுத்துள்ள அறிக்கையில், 
 

நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்ல உள்ளதாகவும் தனது மேல்நாட்டு பயணம் தொடரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். நாம் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தும் தண்ணீரை ஏழு ஏக்கருக்கு பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பத்தை இஸ்ரேல் புகுத்தியுள்ளது. கழிவுநீரை மறுசுழற்சி செய்து விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து அறியவே செல்ல திட்டமிட்டிருக்கிறோம் என்கிறார் முதல்வர்.

 

eps


 

இஸ்ரேல் நிலையமைப்பு பருவநிலை மழை அளவு குறிப்பாக தமிழகத்திற்கு ஏற்றதல்ல. தமிழகத்தில் பருவநிலை, நீர்நிலைகள், ஆறுகள், பயிர் வகைகள் முற்றிலும் உலகத்தையே மலைக்க வைக்கக் கூடியவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே முப்போகம் பாசனம் பெற்று சோழ வளநாடு சோறுடைத்து என்று பெயர் பெற்றது காவேரி.
 

காவிரி நீரை தேக்கி சிறு ஆறுகளுக்கு பிரித்து கல்லணையை கட்டி உலகுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட பல மொழி அரசர்கள் உபரிநீரை தேக்கவும், மழை இல்லாத காலங்களில் பாசனம் தொடரவும் ஏரி குளம் அமைத்ததால் விவசாயம் செழித்தது.
 

ஆனால் இன்றோ வாய்க்கால்கள் கிளை வாய்க்கால்கள் யாவும் அதன் தலைப்பிலேயே ஆக்கிரமிப்புகளால் சிக்கித் தவிக்கிறது. இதனால்தான் சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் காவிரி நீர் அதிகமாக வந்தும் முக்கொம்புலே கொள்ளிடத்திலே அதை திருப்பி கடலுக்கு விடுகிறோம். ஆனால் இங்கும் கடைமடைக்கு நீர் செல்லவில்லை.


 

 

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 3573 குளங்கள் ஏரிகள் நீர் செல்லவில்லை. காவிரி நீர் வருவதற்கு முன்பு பெட்டவாய்த்தலை அருகே உய்யகொண்டான்வாய்க்கால், அனலை, கோப்பு, எட்டரை, சோம்பரசம்பேட்டை, புத்தூர், ஆறுகள், குழுமிக்கரை, திருவரம்பூர், காட்டூர், வல்லம் வரை காவிரி நீர் செல்ல வரவில்லை.
 

அதைப்போல் புலிவலம் பகுதியில் காவிரி நீர் பிரிந்து கொடிக்கால் வாய்க்கால் வழியே குழுமணி பேரூர், மருதண்டகுறிசி வழியே குடமுருட்டி சென்று காவிரியில் கலக்கும் ஆனால் நீர் செல்லவில்லை.
 

கல்லணையிலிருந்து கொள்ளிடம் காவிரி வெண்ணாறு கல்லணைக் கால்வாய் வழியாக காவிரி நீர் சோழநாட்டை வளமடைய செய்யும். ஆனால் கடைமடை வரை காவிரி நீர் செல்லவில்லை. முக்கொம்பில் உபரிநீர் நீர் சென்று கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்கிறது.
 

தஞ்சாவூரில் 724 ஏரி குளங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 168 ஏரி குளங்கள் என்று திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகையில் மட்டும் 8753 குழந்தைகள் ஏரிகள் காவிரி நீர் செல்ல வில்லை ஆனால் உபரி நீரை கொள்ளிடத்திலிரந்து சுலபமாக திறந்ர் விடுகிறோம்.
 

முதலில் கட்டளை காவேரி கதவணைக்கு வரும் நீர் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் திருச்சி தஞ்சை புதுக்கோட்டை குளங்கள் நிரம்ப வேண்டும் . உய்யகொண்டான் வாய்க்கால் மூலம் ஏரிகள் நிரப்பப்பட வேண்டும்.
 

அதன்பிறகு கல்லறைக்கு சென்று கடைமடை வரை தாராளமாக செல்ல வேண்டும். எட்டு வழி சாலை போல் வாய்க்கால்களில் தலையிலிருந்து அகலப்படுத்தி உள் கொள்ளவை அதிகப்படுத்தி அனைத்து ஏரிகளுக்கு நீர் செல்ல வழி செய்தால் முகப்பில் இருந்து உபரி நீரை கொள்ளிடத்திற்கு விடாமல் நீரை சேமிக்க முடியும்.
 

முன்னாள் முதல்வர் காமராஜ் விவசாயிகளை சந்திக்கும் போது அவர்கள் கூறும் கருத்துகளை சரி என்று பட்டாலும் பயனுள்ளதாக இருந்தாலும் உடனே அதை செயல் படுத்த உத்தரவிடுவார் அரசு ஆணை பின்னர் வரும் முதலில் அதனை செயல்படுத்துங்கள் என்பார்.
 

சுதந்திரத்திற்குப் பிறகு கீழ் பவானித்திட்டம் கிருஷ்ணகிரி சாத்தனூர் ஆகிய ஊர்களில் பாயும் தென்பெண்ணை திட்டம், வைகை ஆற்றின் குறுக்கே வைகை அணை பெரியகுளத்தில் இருந்து பாலாற்றில் நீர் காவேரிப்பாக்கம், மகேந்திரமங்கலம் மாமண்டூர் ஏரிகளுக்கு நீர் செல்லும் வரை வாய்க்கால்கள், பாசனத்தில் கீழணை, மேலணை காட்பாடியில் சேயாற்றின் குறுக்கே ஒரு அணை புதுக்கட்டளை வாய்க்காலில் புள்ளம்பாடி வாய்க்காலில் என்று வாய்க்கால் தலைப்பில் ஏரிக்கரை நின்றுகொண்டு காமராஜர் அளித்த சிறிய பெரிய அணைகள் பலப்பல .


 

 

அதேபோல் கட்டளை கட்டளை முதல் கல்லணை வழியாக டெல்டா மாவட்டங்களுக்கு சென்று வாய்க்கால்கள் ஏரிகள் சீர்செய்ய அரசிடம் உள்ள கருத்துக்களை காமராஜர் போல வாய்க்கால் தலைப்பிலேயே ஏறி கரையிலேயே அரசு ஆணை இட்டால் ஒரு சொட்டு நீர் முக்கொம்பில் கொள்ளிடத்திற்கு திறந்துவிட வேண்டிய அவசியம் ஏற்படாது.
 

முதல்வர் இஸ்ரேல் செல்லும் முன் காவிரி பாசன பகுதிகளில் 10 நாள் நடைபயணம் சென்றால் நீர் மேலாண்மை 10 நாளிலேயே 100% வெற்றி பெறும் தமிழகத்தில் காவிரி ஜீவநதியாக மாறி டெல்டா மாவட்ட மக்களுக்கு செழிக்கும் என கூறியுள்ளார். 
 


 

சார்ந்த செய்திகள்