நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்த்தை இழந்தது. காங்கிரஸிற்கு இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் ராகுல் காந்தி வழங்கினார்.
மேலும் அடுத்த தலைவரை சீக்கிரமாக தேர்ந்தெடுங்கள் என்றும் காங்கிரஸ் கமிட்டியிடம் அறிவுறுத்தினார். இதனையடுத்து அவதூறு வழக்கு காரணமாக நேற்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டு கட்சியின் முக்கிய தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது கட்சி நிர்வாகிகளிடம், மும்பையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் போது எல்லாரும் எங்கு போனீங்க, இப்படி இருந்தால் கட்சி எப்படி வளர்ச்சி அடையும் என மும்பையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளிடம் கோபமாக பேசியதாக சொல்லப்படுகிறது.
மக்கள் மழையால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு களத்தில் சென்று உதவ வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டிங்களா என்று மிக கோபமாக பேசியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கட்சியை வளர்க்க ஆக்கபூர்வமான செயல்களை கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லியதாக தெரிகிறது.