Skip to main content

எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டம் நிறைவு; 6 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

patna oppostion party meeting end

 

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நிறைவு பெற்றது.

 

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து சற்று காலதாமதமாக நன்பகல் 12 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் கூட்டம்; பாட்னாவில் குவிந்த தலைவர்கள்

இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந் கெஜிரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்‌சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திவாங்கர் மற்றும் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 16  எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட  6 மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். 

 


 

சார்ந்த செய்திகள்