
நிர்வாண கோலத்தில் வீட்டில் மறைந்திருந்த மனைவியின் காதலனை, கணவர் உள்பட குடும்பத்தினர் அடித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், ஃபதேகாபாத் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும், பக்கத்து வீட்டு இளைஞருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. பெண்ணின் கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில், அந்த இளைஞர் அடிக்கடி வீட்டிற்கு ரகசியமாக வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், கடந்த 20ஆம் தேதி இரவு பெண்ணின் குடும்பத்தினர் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண், தனது ஆண் நண்பரை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி வீட்டிற்கு வந்த இளைஞரும், அந்த பெண்ணும் வீட்டில் உள்ள அறையில் தங்களைப் பூட்டிக் கொண்டனர். இதையடுத்து, மாடியில் இருந்து கீழே இறங்கிய கணவருக்கு, அந்த அறையில் இருந்து ஒரு ஆணுடைய சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் சந்தேகமடைந்த அவர், குடும்ப உறுப்பினர்களை வரவழைத்து அறை கதவை தட்டியுள்ளார். இதில் பதற்றமடைந்த அந்த பெண், தனது காதலனை அறையின் மூலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய அட்டைப் பெட்டிக்குள் ஒளிந்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்த பெண் கதவை திறந்துள்ளார். அறைக்குள் நுழைந்த கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அங்கு சோதனையிட்டனர். அப்போது அவர்கள் அந்த அட்டைப் பெட்டியை திறந்து பார்த்த போது, அதில் நிர்வாண கோலத்தில் அந்த இளைஞர் சுருண்டு கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்த இளைஞரை தரதரவென இழுத்து கம்பால் அடித்து தாக்கியுள்ளனர். அதன் பின்னர், அவரை போலீசிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.