மத்திய அரசை கேள்வி கேட்கும் யோக்கியதை இல்லாதவர்களாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இருக்கிறார்கள்
திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (04-04-2018) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்: திமுக ஆட்சியில் இருந்தபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்று முதல்வரும், துணை முதல்வரும் சொல்கிறார்களே?
ஸ்டாலின்: தூங்குபவர்களை எழுப்பி விடலாம். ஆனால், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பவே முடியாது. அப்படிப்பட்ட எண்ணத்தில் இருப்பவர்கள் அவர்கள். மத்திய அரசை கேள்வி கேட்கும் யோக்கியதை இல்லாதவர்களாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை.
செய்தியாளர்: திமுகவின் போராட்டங்கள் அரசின் போராட்டத்தை சீர்குலைப்பதாக சொல்கிறார்களே?
ஸ்டாலின்: மத்திய அரசை கண்டித்து அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் கூட போட முடியாமல், அயோக்கிய தனமான காரியங்களை செய்து கொண்டிருப்பவர்களின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி, என்னுடைய தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.
செய்தியாளர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் பயணம் எப்போது தொடங்குகிறது?
ஸ்டாலின்: நாளை அனைத்து கட்சி கூட்டம் கூட்டவிருக்கிறோம். அதில் முடிவு செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தார்.