Published on 21/06/2019 | Edited on 21/06/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று மீதமுள்ள தொகுதிகளில் படுதோல்வி அடைந்தது. நாடாளுமன்ற தேர்தலின் போதே தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக 13 இடங்களை கைப்பற்றியது. அதிமுக 9 இடங்களை கைப்பற்றியது. அதிமுக கைப்பற்றிய 9 தொகுதிகளில் பாமக செல்வாக்காக இருக்கும் வட மாவட்டங்களில் உள்ள சோளிங்கர், அரூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய இடங்களில் அதிமுக வெற்றிபெற்றது.
மேலும் வட மாவட்டங்களில் இருக்கும் பாமக ஓட்டுக்கள் அனைத்தும் அதிமுகவுக்கு விழுந்துள்ளன. இதனைப்போன்று தென் தமிழக்தில் புதிய தமிழகம் கட்சி செல்வாக்குக்காக இருக்கும் நிலக்கோட்டை, பரமக்குடி, விளாத்திகுளம், சாத்தூர், மானாமதுரை ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஆகையால் அதிமுக ஆட்சியில் இருப்பதற்கு பாமகவும், புதிய தமிழக கட்சியும் தான் காரணம் என்று அக்கட்சியினர் கூறிவருகின்றனர். இதனால் அதிமுக சார்பில் பாமகவிற்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று மிக அழுத்தமாக அக்கட்சியினர் அதிமுக தலைமைக்கு கோரிக்கை வைக்கின்றனர்.