




Published on 15/07/2021 | Edited on 15/07/2021
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக சென்னை காமராஜர் அரங்கிலிருந்து தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள அவரது நினைவு இல்லம் வரை பேரணி நடத்தினர். இதனை அக்கட்சியின் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.