Skip to main content

கனிமொழி வீட்டில் நடந்தால் தமிழிசை வீட்டிலேயும் நடக்கணுமா? ஏட்டிக்கு போட்டியா? தமிழிசை பேட்டி

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

 

உரிய ஆதாரங்கள் இல்லாமல் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்க மாட்டார்கள் என்று தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.

 

kanimozhi - Tamilisai Soundararajan



தனியார் தொலைக்காட்சி ஒன்று தமிழிசை பேட்டி அளித்துள்ளார். 
 

பாஜக வேட்பாளர் வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது அங்கு ஏன் சோதனை நடத்தவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக குற்றம் சாட்டியிருக்கிறார். அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

எனக்கு சிரிக்கிறதா என்னவென்று தெரியவில்லை. நான் நேரடியாக வரி கட்டி நேர்மையாக சம்பாதித்தவள். என்னிடம் கோடி கோடியாக பணம் இருப்பதாக சொல்வதற்கு இதுவும் என்ன தேர்தல் களமா? கனிமொழி வீட்டில் நடந்தது என்றால் தமிழிசை வீட்டிலேயும் நடக்கணுமா? ஏட்டிக்கு போட்டியா? வருமான வரித்துறை ஏதாவது காரணத்தை வைத்துத்தான் சோதனை நடத்தியிருப்பார்கள். இல்லையென்று சொல்ல சொல்லுங்கள். அவர்களிடம் இல்லை. அவர்கள் கீழே இருக்கும் நிர்வாகிகளிடம் பணம் போய்விட்டது. கனிமொழி வீட்டில் சில ஆதாரங்கள் அடிப்படையில் சோதனை நடத்தியிருப்பார்கள். கனிமொழி வீட்டில் பண்ணினார்கள் என்றதும், தமிழிசை வீட்டிலும் பண்ணணுமுன்னு கிடையாது. இது தேர்தல் களம் கிடையாது. இதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். 

 

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், எங்க வீட்டில் பார்த்தியா, அப்ப அவுங்க வீட்டிலேயும் பாரு என்று கூறுவது  ஒரு அரசியல் கட்சித் தலைவர் பேசுவது மாதிரியாகவா இருக்கிறது. இன்னொன்று, வேண்டுமென்றே தேர்தலை வேலூரில் நிறுத்தியதைப்போல... என்று கனிமொழி கூறுகிறார். இது சரியா? வேலூரில் ஆதாரம் கிடைத்திருக்கிறது. துரைமுருகன் மற்றும் அவரது நண்பர் வீடுகளில் கிடைத்த பணத்தை எண்ணுவதற்கு இரவு 11 மணி ஆகியிருக்கிறது. 11 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் வைத்து தேர்தல் ரத்து செய்யக்கூடாதா? அப்ப எவ்வளவு பொய் சொல்கிறார்கள்?

 

எதிர்க்கட்சியினரை மிரட்டும் வகையில் மாநில அரசையும், வருமான வரித்துறை அதிகாரிகளையும் வைத்து மோடி அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டுகிறார்களே?
 

கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோதே ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் வீட்டில் சோதனை நடந்தது தெரியும். அதேபோல் பல அதிகாரிகள் வீட்டிலேயும் சோதனை நடந்திருக்கிறது. எதிர்க்கட்சி வேட்பாளர்கள் என்று இல்லை, யார் வீட்டில் இருக்கிறது என்று தகவல்கள் கிடைத்திருக்கிறதோ அவர்கள் வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்வார்கள். இவ்வாறு கூறினார். 

 

சார்ந்த செய்திகள்