Skip to main content

''உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றவே நான் விரும்புவேன்''-திண்டுக்கல்லில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

mk

 

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கவும், திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ள நிலையில் இன்று காலை  தேனி மாவட்டத்தில் ரூ.114.21 கோடி மதிப்பில் முடிவுற்ற 40 திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்ததோடு, ரூ.74.21 கோடி மதிப்பில் 102 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

 

அதன்பின் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் அங்கும் 206.56 கோடி ரூபாய் மதிப்புடைய 285 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''மிகப்பெரிய மாற்றத்திற்கான அடித்தளத்தை தமிழகத்தில் உருவாக்கி வருகிறோம். 20 ஆண்டுகால குடிநீர் பிரச்சனையை தீர்க்க திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்த சூழ்நிலையிலும் உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றவே நான் விரும்புவேன். ஆழியாறு நதியை ஆதாரமாக கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும். சமூக நீதி, மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என நினைக்ககூடியவன் நான். இத்தகைய உன்னதமான சிந்தனையானது நடைபெறப்போவது தனிப்பட்ட என்னால் அல்ல... இதையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னால் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் என அனைவருக்கும் இந்த பொறுப்புணர்வு இருந்து கைகோர்க்க வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்