மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று புத்தாண்டினை ஒட்டி மதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இந்திய துணைக் கண்டத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து என்னவென்றால், ஜனநாயகத்தின் அடித்தளத்தை அசைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகிய சமூகநீதிக்கு, மதச்சார்பற்ற தன்மைக்கு, கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஒவ்வொரு பிரச்சனையாக ஏற்பட்டுக்கொண்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும். பாஜக வலுவாகத்தான் இருக்கிறது. அவர்கள் எண்ணிக்கை அளவிலும் வலுவாக இருக்கிறார்கள். மீண்டும் அதே எண்ணிக்கை பெறுவதற்கான முயற்சிகள் நடக்கிறது. இப்போது பலகட்சிகளும் பிரிந்து உள்ளது. பாஜக அல்லாத மற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும்.
பாஜகவை வீழ்த்தும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என எதிர்க்கட்சிகள் அனைவரும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆகையால் அந்த வாய்ப்பு ஏற்படலாம். எதிர்க்கட்சிகளை இணைக்கும் அளவு எனக்கு அந்த சக்தி இல்லை” எனக் கூறினார்.