புதிய திரைப்படங்கள் வெளியிடுவதை நிறுத்தி வைத்துள்ள நிலையில் தயாரிப்பாளர்களும் படப்பிடிப்புகளை 16 ஆம் தேதியிலிருந்து நிறுத்த முடிவெடுத்துள்ளனர்.
தயாரிப்பு வேலை முடிந்தும் திரையிடமுடியாமல் படங்களை நிறுத்தியிருப்பதால் தயாரிப்பாளர்கள் பலர் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டால் சினிமா தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, தயாரிப்பாளர் கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்திக்கச் சென்றனர். தலைமைச் செயலகத்தில் அவர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜு…
“என்னை எதுக்கு பாக்க வர்றீங்க. அதான் ஒங்க பிரச்சனை மட்டுமில்லாம, எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு சொல்றதுக்கு கமலும் ரஜினியும் இருக்காங்களே. அவுங்க கிட்ட போய் சொல்ல வேண்டியதுதானே” என்றார்.
“இப்போ தொழிலே முடங்குற நிலைமைல இருக்கு. தியேட்டர் முழுக்க மூட வேண்டிய நெலைமைக்கு போயிருச்சு. படப்பிடிப்பும் நிறுத்தினா ரொம்ப பாதிப்பா போயிரும். அமைச்சர்ன வகையில் நீங்கதான் நல்ல முடிவு சொல்லனும்” என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
“அடப் போங்கய்யா. சினிமா இல்லாட்டியும் மக்களுக்கு பொழுதுபோக்கு நெறைய இருக்கு. நாங்களே இப்போ பொழுதுபோக்காத்தான் இருக்கோம்” என்று சிரித்தபடியே சென்றிருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு.