தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு முகமை நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன், கலை மற்றும் கலாசார துறை ஆணையர் ராமலிங்கம் ஆகியோர், இம்மாதம் ஓய்வு பெறுகின்றனர்.
தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் இந்த மாதத்தோடு ஓய்வு பெறுவதால் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, ஏற்கனவே தான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது, துறைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்.சை தலைமைச் செயலாளர் நாற்காலியில் உட்கார வைக்க ஆசைப்படுகிறார்.
ஆனால் அந்தப் பதவிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான கவரனரின் செயலாளர் ராஜகோபால், நிதித்துறைச் செயலாளர் சண்முகம் என சீனியர்கள் பலரின் பெயர்கள் அடிபடுகிறது. இருப்பினும் தலைமைச் செயலருக்கு, பதவி நீட்டிப்பு வழங்க வாய்ப்பு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.