Skip to main content

திரையுலகில் கோடிகளை கொட்டும் அமைச்சரின் ‘யோக’ தம்பி! -வட்டியும் குட்டியுமாய் பெருகும் ஊழல் பணம்!

Published on 04/05/2020 | Edited on 04/05/2020
ddd



ரூ.1815 கோடி மதிப்புள்ள டான்பிநெட் டெண்டரை இறுதி செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ’புகாரில் முகாந்திரம் இருப்பதாக மத்திய அரசே சொல்லிவிட்டது.  அந்த அமைச்சரை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்..’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  
 

இந்த டெண்டர் விவகாரத்தில் வில்லங்கமான தலையீடு இருந்ததென்றும், அதனாலேயே,  தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக இருந்த சந்தோஷ்பாபு  ‘புழுங்கித் தவித்தார்; வி.ஆர்.எஸ். கேட்டார்; டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்’  என கிசுகிசுக்கிறது கோட்டை வட்டாரம். 
 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதியில், சி பிளாக்கில் உள்ள  அந்த அமைச்சரின் அறையிலும், அதனை ஒட்டியுள்ள அறைகளிலும் தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் அதிரடி சோதனை நடத்தியபோதே, எவ்வளவு பணம் சிக்கியது? என்னென்ன பிடிபட்டது? என சர்ச்சை எழுந்தது. அப்போது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தேர்தல் கண்காணிப்புக்குழு மற்றும் வருமான வரித்துறை மூலம் ரூ.139 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த 139 கோடி ரூபாயில், வருமான வரித்துறை பறிமுதல் செய்தது ரூ.55 கோடி என்று சொல்லப்பட்டது.   அப்போதும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். 
 

கடந்த பிப்ரவரி மாதம் மதுரையை சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு தொடர்புள்ள 18 இடங்களில் சோதனை நடந்து, ரூ.77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டபோது, பினாமிகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. அந்த நேரத்திலும்,  ‘எல்லாம் அமைச்சர்களின் பணம்’ என்று சில அமைச்சர்களின் பெயர் அடிபட்டது.  அன்புச்செழியனுக்கு கட்சியில் பொறுப்பு கிடைத்த பின்னணியில் அந்த அமைச்சர்  இருந்தார் என்று பேசப்பட்டது. 
 

அரசியல் வட்டாரத்தில், “அந்த அமைச்சர்,  தனது  ‘யோகமான’ தம்பி மூலம், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்தி திரையுலகத்தினருக்கும், கோடிகளில் ‘பைனான்ஸ்’ செய்து வருகிறார். ஓரிரு தமிழ் சினிமாக்களில் தலை காட்டிய அந்தத் தம்பி, இந்தி படத்திலும் திறமை(?) காட்டி வருகிறார். ஆட்சி அதிகாரத்தின் மூலம் சம்பாதித்து, நாள்தோறும் மூட்டை மூட்டையாகக் கட்டி,   சினிமா தயாரிப்பாளர்களிடம் வாரியிறைக்கிறார்.. முறைகேடாக குவித்த அந்தப் பணமெல்லாம் வட்டியும் குட்டியுமாய் பெருகியபடியே இருக்கிறது.” எனச் சொல்கின்றனர்.  
 

இந்தக் கரோனா காலக்கட்டத்தில், அதிமுக ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் மலிந்து கிடப்பதன் பின்னணியில் உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவராக வெளிப்பட்டாலும், ஆட்டுவிப்பவர்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்வதற்கான  பேரங்களும் திரைமறைவில் நடந்தபடியே உள்ளன.      


 

சார்ந்த செய்திகள்

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.