Skip to main content

ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

மாமேதை கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களை அவதூறாகப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆளுநர் மாளிகை அருகே சின்னமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (25.02.2023) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை) உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆளுநரின் பேச்சுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'கள்ளச்சாராய உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது'-தமிழக ஆளுநர் இரங்கல்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
nn

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 16 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே  முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்னர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு அமலாக்க பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த கவிதா, பாண்டி, செல்வி,பாரதி, ஆனந்தன், சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்டோரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், 'கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அவ்வப்போது கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்த செய்திகள் வெளிவருகின்றன. சட்டவிரோத மதுபான தயாரிப்பு, நுகர்வை தடுப்பதில் உள்ள குறைபாட்டை இது பிரதிபலிக்கிறது' என தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் விவரம்: சுரேஷ், பிரவீன், மற்றொரு சுரேஷ், தனக்கொடி, வடிவு, சேகர், கந்தன், ஆறுமுகம், ஜெகதீஷ், மணிகண்டன், மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா, நாராயணசாமி, ராமு, சுப்பிரமணி, டேவிட்.  

Next Story

திராவிட இயக்க வரலாறு குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சனம்!

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
Governor R.N. Ravi Review On the history of the Dravidian movement

நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள ராஜ்பவனில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டைப் பல்கலைக்கழகங்களின் வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி நேற்று (27.05.2024) தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாநாட்டின் தொடக்கத் தொடக்க உரையாற்றினர். மேலும் இந்த மாநாட்டில் உயர்கல்வித்துறையின் செயல்பாடு, உயர்கல்வியில் ஆராய்ச்சியின் சிறப்பம்சம், கல்வி நிறுவன மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், பேராசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய மனித விழுமியங்களை ஊக்குவித்தல் போன்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று (28.05.2024) ஆளுநர் ஆர்.என். ரவி நிறைவு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது. இது மட்டுமே வரலாறு இல்லை. தேசிய அளவிலான சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து தமிழக பாடப் புத்தகத்தில் இடம்பெறவில்லை. வேலுநாச்சியார், கட்டபொம்மன் ஆகியோர் பெயர்கள் சமூக அறிவியல் மற்றும் வரலாறு பாடப் புத்தகத்தில் உள்ளன. ஆனால் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நில உரிமையாளர்களுக்குத் தமிழர்கள் விற்கப்பட்ட வரலாறு பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டாமா?. மாணவர்கள் மத்தியில் எதைப் படிக்க வேண்டும் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை

 

எனவே இளங்கலை அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் விடுதலை போராட்ட வரலாறு பாடங்கள் இடம்பெற வேண்டும். மேலும் பாடத்திட்டத்தில் விடுதலை போராட்ட வரலாறு பாடங்கள் இடம்பெறுவதைப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் உறுதி செய்ய வேண்டும். ஆண்டு தோறும் முனைவர் பட்டம் பெறும் மாணவர்களில் 5 சதவீத மாணவர்களே தரமிக்கவரகள்” எனப் பேசியுள்ளார்.