Published on 02/03/2018 | Edited on 02/03/2018

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 7ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார் கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா. இந்த நிலையில் இது தொடர்பாக நாளை காலை நேரில் சந்தித்து ஆலோசிக்க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.