Skip to main content

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடரப்போகும் வழக்கு... நடுக்கத்தில் ஒ.பி.எஸ்., ரவீந்திரநாத்

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

 

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அமமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். 


  E. V. K. S. Elangovan


இந்த நிலையில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், 
 

தேனி தொகுதியில் போட்டியிட்ட எனக்காக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதற்காக அவரை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டோம். ரவீந்திரநாத் குமார் எம்.பி.யாகவோ, மந்தியாகவோ பதவியேற்க இடைக்கால தடை விதிக்கக்கோரி இன்னும் ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளோம் என்றார். 
 

தேர்தல் பிரச்சாரத்தின்போதே ரவீந்திரநாத் குமாரை எதிர்த்து போட்டியிட்ட இளங்கோவன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் உள்பட வேட்பாளர்கள், ஆளும் கட்சியின் துணையுடன் பணப்பட்டுவாடா நடப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென இரவில் வந்து இறங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கையின்போதும் சில குற்றச்சாட்டுக்களை எழுப்பினர். இந்தநிலையில் வழக்கு தொடரப்போவதாக இளங்கோவன் கூறியிருப்பது ஓ.பி.எஸ். மற்றும் ரவீந்திரநாத்குமாருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்