மாற்று கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த பலருக்கும் கட்சியில் பொறுப்புகளை கொடுத்து அசத்தியிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த நியமனத்தின் பின்னணியில் சில சாணக்கியத்தனம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மாற்று கட்சியினருக்கு பதவிகள் கொடுத்திருப்பது குறித்து நாம் விசாரித்தபோது, திமுக கூட்டணியில் சாதி கட்சிகளை சேர்த்துக் கொள்வதால் வரும் எதிர்மறை விமர்சனங்கள் ஸ்டாலினுக்கு உறுத்தலாகவே இருந்து வந்தது. இதனை தவிர்க்க, திமுகவில் அதிருப்தியில் இருக்கும் சமூகத்தினருக்கும் மாற்று கட்சியிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கும் சமூக ரீதியிலான பிரதிநிதித்துவம் வழங்குவது கட்சிக்கு வலிமை சேர்க்கும் என திட்டமிடப்பட்டதன் காரணமாகவே புதிய நியமனங்களில் பல்வேறு சமூகத்தினருக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அணுகுமுறை இன்னும் தொடரும் என்கிறார்கள் திமுக மா.செ.க்கள்.