தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.
இதில், தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து சுமார் 3,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட 70- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பொதுக்குழுவில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க.பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க. சட்டத்திட்ட விதி பிரிவு 17(3) ன் படி ஆ.ராசா, பொன்முடி துணைப்பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, மறைந்த திமுக நிர்வாகிகள் 140 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அருந்ததியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு உரிய இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வில் சமூக அநீதி களைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தி மொழியை திணிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கூடாது; இந்தி மொழிக்கு திணிப்புக்கு கண்டனம்.
சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தி.மு.க. தலைவர் முதல்வராக 2021ல் ஆட்சி அமைத்திட சூளுரை உட்பட 12 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.