
உடுமலைப்பேட்டை சங்கரின் ஆணவ கொலைவழக்கின் மேல்முறையீட்டில் கவுசல்யாவின் தந்தையை விடுவித்தும், மற்ற ஐவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும், தாய்-தாய்மாமா உள்ளிட்ட மூவரின் விடுதலையை உறுதிசெய்தும் காவல்துறை மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
— Udhay (@Udhaystalin) June 24, 2020
உடுமலைபேட்டை சங்கர் என்கிற இளைஞரின் ஆணவப் படுகொலை ஒட்டுமொத்த மனித சமுகத்தையும் திரும்பிப் பார்க்கவைத்தது. பட்டபகலில் மக்கள் அதிகம் புழக்கம் உள்ள இடத்தில் நடந்த ஆணவப் படுகொலை செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது. முக்கியக் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னசாமி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை ஆராயும்போது உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கின் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்குத் தனியாகச் சட்டம் இயற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் திமுகவின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக் கூறியுள்ளார். அதில், உடுமலைப்பேட்டை சங்கரின் ஆணவக் கொலைவழக்கின் மேல்முறையீட்டில் கவுசல்யாவின் தந்தையை விடுவித்தும், மற்ற ஐவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், தாய்-தாய்மாமா உள்ளிட்ட மூவரின் விடுதலையை உறுதி செய்தும் காவல்துறை மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம் என்றும், கவுசல்யாவின் தந்தை, தாய், தாய்மாமா பாண்டித்துரை மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ‘அப்படியெனில் இது ஆணவக் கொலையல்ல, கூலிப்படை கொலையா’ என்ற கேள்விக்கு பட்டபகலில் பலரின் முன்னால் நடந்த கொலை வழக்கைச் சரியான ஆதாரம், சாட்சியங்களுடன் நடத்தாத அரசே பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.