திமுகவை உடைப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரிக்கு மோடி பதவி கொடுத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான சர்வேஷ். இவர் அம்பத்தூர் காவல் கண்காணிப்பாளராக இருந்தார். இவரும் ஸ்டாலின் மருமகன் சபரீசனும் ஒன்றாக படித்தவர்கள். அதனால் திமுகவை நெருங்க விரும்பும் ஐபிஎஸ் அதிகாரிகள் சர்வேஷை தொடர்புகொள்ள ஆரம்பித்தார்கள். சர்வேஷ் மூலமாக திமுகவுக்கு சாதகமான லாபி உருவாவதை கண்ட எடப்பாடி பழனிசாமி, அவரை முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு தூக்கியடித்தார்.
உடனே சர்வேஷ் தனது தம்பியான ரித்தீஷை களமிறக்கினார். சர்வேஷின் தொடர்புகளையெல்லாம் ரித்தீஷ் மேற்பார்வையிட்டு வருகிறார். அதனால் ரித்தீஷிடம் பணம் குவிந்து வருகிறது. சமீபத்தில் நீலாங்கரையில் இருபது கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றை வாங்கிய ரித்தீஷ், புதிதாக நடிகர் விஜய் மட்டுமே வைத்திருக்கும் விலை உயர்ந்த காரான ரோல்ஸ் ராய் காரை வாங்கினார்.
இதையெல்லாம் பார்த்த வருமான வரித்துறையினர், ரித்தீஷை கிடுக்கிப்பிடிப்போட்டு விசாரித்து வருகின்றனர். அவர்கள் மூலம் உண்மைகளை தெரிந்துகொண்ட பாஜக, சர்வேஷை மத்திய உளவுத்துறையான 'ரா'வின் அண்டர் செகரட்டரியாக நியமித்திருக்கிறது. அவருக்கு ஒரு புதிய அசைண்மெண்ட்டையும் கொடுத்திருக்கிறது.
திமுகவில் இருக்கக்கூடிய விவிஐபிக்களுடன் தொடர்பு இருக்கும் சர்வேஷ் மூலம் திமுகவை துண்டு துண்டாக உடைப்பதற்கு பாஜக காய் நகர்த்தி வருகிறது என தெரிவிக்கிறது வருமானவரித்துறை வட்டாரங்கள்.