Published on 03/05/2021 | Edited on 03/05/2021

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் வெற்றிபெற்று, வெற்றிச் சான்றிதழையும் பெற்றுள்ளார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சீரழிந்த திருச்சியை, சீர்மிகு திருச்சியாக மாற்றப் பாடுபடுவேன்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என தெரியுமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், “நன்றாகத் தெரியும். ஏற்கனவே அமைச்சராக இருந்தவர் எந்த சரியான செயல் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அதிகாரப் போக்கில் செயல்பட்டதால் மக்கள் வெறுப்பில் இருந்தார்கள். அவர்கள் செயல்படுத்திய எந்தத் திட்டமும் மக்களுக்குச் செல்லவில்லை. சுகாதாரமான திருச்சியாக மாற்றுவது என் முதல் திட்டம்” என கூறினார்.